Saturday, 14 April 2018

ஜோதிகாவுடன் இணையும் விதார்த்

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் விதார்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மகளிர் மட்டும்’ படத்துக்குப் பிறகு ‘நாச்சியார்’ படத்தில் நடித்த ஜோதிகா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற துமாரி சுலு படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். இதைத் தமிழில் இயக்குநர் ராதாமோகன் ரீமேக் செய்ய, வித்யாபாலன் நடித்த ஆர்.ஜே. கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

தற்போது இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரமொன்றில் நடிக்க நடிகர் விதார்த் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் விதார்த் ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார். விதார்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. ’மொழி ’ பட இயக்குநருடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தப் படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார். தற்போது நடைபெற்றுவரும் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment

இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘ வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றன...