Monday, 7 May 2018

தூக்கத்தில் மறந்து பெண் செய்த காரியம்… பரிதாபமாக பலியான சோகம்

இரவில் காதில் ஹெட்போன் மாட்டிய படி தூங்கிய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கணத்தூர் பகுதியில் வசிப்பர் பாத்திமா(45). இவர் கடந்த சனிக்கிழமை இரவு தூங்கும் போது காதில் ஹெட்போன் மாட்டி பாட்டு கேட்ட படியே தூங்கிவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் கணவர் அவரை எழுப்பிய போது அவர் எழவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரின் கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பாத்திமாவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சந்தேகம் மரணம் என்பதால் இதுகுறித்து பொலிசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. எனவே, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் பாத்திமா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
இரவின் செல்போனில் பாடல்கள் கேட்டுக் கொண்டே ஹெட்போனை கழட்டாமல் தூங்கியதால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது


No comments:

Post a Comment

இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘ வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றன...