Saturday, 31 March 2018

தேநீர் விற்று கோடீஸ்வரியாகிய அமெரிக்கப் பெண்


இந்தியப் பயணத்தின் போது, சுவைத்த தேநீரை மறக்க முடியாத பெண் ஒருவர், அமெரிக்காவில் அதனைத் தயாரித்து விற்று கோடீஸ்வரியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடாவைச் சேர்ந்தவர் புரூக் எடி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், 2002 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் சுவைத்த தேநீர் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னரும் அதன் சுவையை மறக்க முடியவில்லை.
கொலரடா நகரில் ஏராளமான தேநீர்க் கடைகள் உள்ளன. அங்கு சென்று அவர் தேநீர் சுவைத்த போதும், இந்தியாவில் கிடைத்த சுவை அவருக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து, 2006ஆம் ஆண்டு முதல், வீட்டில் தேநீர் தயாரித்து, பக்தி சாய் என்ற பெயர் வைத்து, தனது காரில் பின் பகுதியில் வைத்து பகுதி நேரமாக விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
இஞ்சி மற்றும் மசாலா சேர்த்து அவர் தயாரித்த தேநீருக்கு பலர் வாடிக்கையாளர்களாக மாறினர். இதனையடுத்து, புரூக் தயாரித்த தேநீர் பல கடைகளில் விற்பனையானது.
மேலும், 2007 முதல் இணையதளம் மூலமும் விற்பனையை ஆரம்பித்த அவர், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, முழுநேர வேலையை விட்டுவிட்டு, தேநீர் விற்பனையில் முழு கவனம் செலுத்தினார்.
விற்பனை மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்யும் வகையில் 2008 இல் பக்தி சாய் நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்தது. புரூக்கின் கடும் உழைப்பு காரணமாக, அமெரிக்காவின் தொழில் முனைவோர் பத்திரிகையின், சிறந்த தொழில் முனைவோர் பட்டியலில் 5 ஆவது இடத்திற்குள் வந்தார். இந்த வருடம் 7 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக பக்தி சாய் நிறுவனம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘ வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றன...