Saturday, 31 March 2018

தேநீர் விற்று கோடீஸ்வரியாகிய அமெரிக்கப் பெண்


இந்தியப் பயணத்தின் போது, சுவைத்த தேநீரை மறக்க முடியாத பெண் ஒருவர், அமெரிக்காவில் அதனைத் தயாரித்து விற்று கோடீஸ்வரியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடாவைச் சேர்ந்தவர் புரூக் எடி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், 2002 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் சுவைத்த தேநீர் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னரும் அதன் சுவையை மறக்க முடியவில்லை.
கொலரடா நகரில் ஏராளமான தேநீர்க் கடைகள் உள்ளன. அங்கு சென்று அவர் தேநீர் சுவைத்த போதும், இந்தியாவில் கிடைத்த சுவை அவருக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து, 2006ஆம் ஆண்டு முதல், வீட்டில் தேநீர் தயாரித்து, பக்தி சாய் என்ற பெயர் வைத்து, தனது காரில் பின் பகுதியில் வைத்து பகுதி நேரமாக விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
இஞ்சி மற்றும் மசாலா சேர்த்து அவர் தயாரித்த தேநீருக்கு பலர் வாடிக்கையாளர்களாக மாறினர். இதனையடுத்து, புரூக் தயாரித்த தேநீர் பல கடைகளில் விற்பனையானது.
மேலும், 2007 முதல் இணையதளம் மூலமும் விற்பனையை ஆரம்பித்த அவர், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, முழுநேர வேலையை விட்டுவிட்டு, தேநீர் விற்பனையில் முழு கவனம் செலுத்தினார்.
விற்பனை மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்யும் வகையில் 2008 இல் பக்தி சாய் நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்தது. புரூக்கின் கடும் உழைப்பு காரணமாக, அமெரிக்காவின் தொழில் முனைவோர் பத்திரிகையின், சிறந்த தொழில் முனைவோர் பட்டியலில் 5 ஆவது இடத்திற்குள் வந்தார். இந்த வருடம் 7 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக பக்தி சாய் நிறுவனம் கூறியுள்ளது.

Friday, 30 March 2018

All-new SA-bound Toyota Rav4 breaks cover at New York auto show





 All-new model to be introduced in SA in 2019
 • First RAV4 to be built on a Toyota New Global Architecture (TNGA) platform
 • New TNGA powertrains – 2.5-litre hybrid electric and 2.0-litre petrol unit
 • Improved driving dynamics, all-wheel drive systems
 • New design elements throughout 
New York - Unveiled at the New York auto show, the fifth-generation Toyota Rav4 will be launched in South Africa in 2019. A hybrid version will be part of the range.
Due in Mzansi next year
Toyota says the designers focused on the key words "adventure" and "refined" to produce a bolder and tougher presence with a lower, wider exterior profile and more sophisticated and premium interior with increased rear legroom.
The adoption of a Toyota New Global Architecture (TNGA) platform results in a longer wheelbase and wider front and rear tracks for stable, confident driving while shorter overhangs enhance new RAV4's ability to overcome rugged terrain. The 2019 RAV4 is the second SUV to adopt a TNGA platform, joining the C-HR that was launched last year.
A new multi-link rear suspension and chassis rigidity that has been improved by 57% contribute to improved handling, minimum interior cabin noise and excellent ride comfort says the automaker.
A new 2.5-litre in-line four-cylinder engine features in both petrol and hybrid models to meet the demand of providing a highly responsive, yet fuel efficient driving experience.
An eight-speed direct-shift automatic transmission is mated to the petrol version while hybrid variants are equipped with a continuously variable transmission.
A new all-wheel-drive system can send 50% of engine torque to the rear wheels and distribute it to the left or right rear wheel for improved handling.
Hybrid Rav4 on the way
The all-new 2.0-litre petrol engine will be designed specifically for the new TNGA architecture and will also be available with a choice of manual or automatic transmissions.
Toyota SA says: "RAV4 will be the first hybrid SUV in the company's local model line-up. The combination of Toyota's latest hybrid system and an advanced new petrol engine will deliver impressive power output and exceptional energy efficiency.
"Toyota's hybrid technology will perfectly complement the work of engineers who have dialed-up the fun-to-drive factor by advancing every aspect of RAV4's performance, handling and ride comfort.
"RAV4 leads the compact SUV segment in South Africa with average monthly sales in excess of 500 units."
The New York reveal also included a RAV4 Adventure model inspired by Toyota's off-road vehicle heritage. It features a more rugged exterior with an aggressive grille, fog light surrounds, large over-fenders and unique wheel design.
In the US, the new RAV4 comes with a raft of new active-safety technologies that enhance protection, including a pre-collision system with pedestrian detection, autonomous emergency braking, cruise control, automatic high beam to name a few.
Exterior dimensions 2019 RAV4 change
Length (mm) 4600 -5
Width (mm) 1855 +10Height (mm) 1700 -10Wheelbase (mm) 2690 +30
Availability and Line-up
The new Rav4 will make its local debut in the second half of 2019. The model line-up and specification details will be disclosed closer to launch timing.

தேங்காய் மூடியில் நடக்கும் அற்புதம்! விரைவாக பகிருங்கள்




தலை முடியில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால், இளம் வயதிலே நரை முடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அடர்த்தி, பளபளப்பு மற்றும் கருமையான கூந்தல் இவைகளை பெற ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரிய கனவே இருக்கும். அதற்கு காரணம் பெண்களின் அழகை தீர்மானிக்க கூந்தலும் ஒரு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது.
இது உண்மையாக இருந்தாலும் கூட அடர்த்தியான நீண்ட கூந்தல் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. அழகான கூந்தலை பெறுவதற்கு கூந்தல் பராமரிப்புகளை பற்றி பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அழகான கூந்தலை பெறுவதற்கும், அப்படியே பெற்று விட்டாலும் கூட, அவை நீண்ட நாட்களுக்கு நீடித்து நிற்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பி போயுள்ளீர்களா? கவலை கொள்ளாதீர்கள், அதற்கு பல தீர்வுகள் உள்ளது.
இயற்கையான முறையில் அழகிய கூந்தலை பெறுவதற்கு நீங்கள் சில வீட்டு சிகிச்சைகளை கையாள வேண்டி வரும்.
உங்கள் கூந்தல் வறண்டு போய் அதிகமாக கொட்டினால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா பெண்களே? ரசயானம் கலந்த விலை உயர்ந்த கூந்தல் பொருட்களின் பின்னால் ஓடினாலும் கூட சில நேரம் அவைகள் பயனளிப்பதில்லை.
அதனால் இயற்கையான சிகிச்சைகளை நாடுவதே சாலச் சிறந்தது. மேலும் இப்படி இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகளில் இருந்தும் தப்பிக்கலாம் அல்லவா? அதனுடன் சேர்த்து உங்களுக்கு நல்ல பலனையும் அளிக்கும்.
கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக பல இயற்கை மூலப்பொருட்கள் உள்ளது. இவைகளை கொண்டு பெண்களுக்கான கூந்தல் பராமரிப்பை கையாளுவது என்பது இயற்கையுடன் கைகோர்த்து நடத்தப்படும் ஒரு எளிய செயல்முறையே.
புதிய முறையில் கூந்தலை வளர்த்து அதனை பராமரிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் அதற்கு ஒரு சிறந்த இயற்கை மூலப்பொருள் உள்ளது.
அப்படி நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் ஒரு பொருள் தான் தேங்காய் பால். தேங்காய் பால் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். சாதரணமாக வீட்டில் கிடைக்க கூடிய பொருளாகிய அதனை கொண்டு செய்யும் சிகிச்சையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
  • தேங்காய் மூடிகள்
  • நெல்லிக்காய் ஓடுகள்
  • தேங்காய் எண்ணெய் -1/2 லிட்டர்
தயாரிக்கும் முறை
முதலில் தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்க வேண்டும். பின் அதனை பொடி செய்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, அதை வெயிலில் சில நாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டும். இதே முறையில், தேங்காய் ஓடுகளுக்கு பதிலாக, நெல்லிக்காய் ஓடுகளை கூட பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
தேங்காய் ஓடுகள் கொண்டு தயாரித்த எண்ணெய்யை தலை முடிகளில் தடவி அப்படியே இருக்கலாம் அல்லது எண்ணெய் தேய்த்து சில மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
நன்மைகள்
இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால், நரைத்த முடிகள் மறைவதைக் காணலாம். இந்த எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.

Monday, 26 March 2018

எவ்வளவு வெயில் அடிச்சாலும் உங்க முகம் வெள்ளளையாக இருக்கனுமா? இதை டிரை பண்ணுங்க

யாருக்குத்தான் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்காது. எல்லோருக்குமே தங்களைத் தாங்களே கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொள்ள மிகப் பிடிக்கும்.
அதேசமயம் கொஞ்சம் கருப்பாக இருந்துவிட்டால் போதும். நான் மட்டும் ஏன் இவ்வளவு கருப்பாக இருக்கிறேன் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்த புலம்பல் அதிகமானால் அதுவே தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடுகிறது. இதெல்லாற்றையும் தூக்கிப் போடுங்கள்.
அதேபோல வெட்டியாக பார்லருக்கு செலவிடுவதை விட, வீட்டில் ஓய்வாக இருக்கும்போது சில குட்டி குட்டி விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும்.

கொளுத்தும் வெயில் கோடை காலம் வேறு தொடங்கிவிட்டது. இப்போது வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கவலை இன்னும் அதிகமாகியிருக்கும். கவலையே படாதீங்க… எவ்வளவு வெயில் அடிச்சா நமக்கென்ன… நம்ம சருமம் கருத்துப்போகாம எப்பவும் பப்பாளிப்பழம் மாதிரி பளபளன்னு இருக்க நம்மகிட்ட தான் நிறைய ஐடியா இருக்கே… அப்புறம் நம்ம ஏன் கவலைப்படணும்… கவலைப்படறத நிறுத்திட்டு கீழே சொல்றத செய்ங்க… தங்கம் மாதிரி மின்ன ஆரம்பிச்சுடுவீங்க
பளபள சருமத்துக்கு
தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒருஸ்பூன், ஈஸ்ட் பவுடர் அரை ஸ்பூன், இவை எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின் கழுவி விடவும். முகம் உடனே பளப்பளப்பாக மாறிவிடும். எங்காவது பார்ட்டிக்கு போகும் முன் இப்படி செய்து பாருங்கள். நீங்களே அசந்து போயிடுவீங்க.

பாலாடை
தயிர் ஏடு அல்லது பால் ஏடு சிறிதளவு எடுத்துக்கொண்டு கால் ஸ்பூன் மஞ்சள் தூளை அதனுடன் சேர்த்து நன்கு நைசாகக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அந்த கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, பின் 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருக்கவும். இதை தினமும் செய்து வந்தாலே எப்படிபட்ட கருமையும் நீங்கிவிடும்.
கரும்புள்ளி நீங்க
ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

Saturday, 17 March 2018

உண்மைக்காதலாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்!

உண்மை காதலை நிரூபித்த காதல் தம்பதிகள்

ந்த காலத்து பசங்க கிட்ட உண்மையான காதலையே பார்க்கமுடியலப்பா என்ற வசனம் பெரும்பாலான இடங்களில் கேட்டிருப்போம். குறிப்பாக பெண்கள் இதில் அதிகமாக வசை வாங்குபவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் பணத்திற்கு தான் வருவார்கள், நம்மிடம் பணமில்லை என்று தெரிந்தால் போதும் உடனேயே நம்மை ப்ரேக் அப் செய்து விடுவார்கள் என்கிற பேச்சு எப்போதும் கடந்து வந்திருப்போம், ஆனால் இந்த கூற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு காதல் தம்பதிகள்!

தாய்லாந்தை சேர்ந்த இருபத்தியோரு வயதான பூஹ் சோக்சாய் என்ற நபருக்கு கண்களில் புற்றுநோய் அதுவும் லாஸ்ட் ஸ்டேஜ். கண்களில் ஏற்பட்ட புற்றுநோ மெல்ல பரவி முகம் முழுவதும் பரவியிருக்கிறது. உறவுகளே அருகில் வர தயங்கக்கூடிய இந்த சூழலில் இவரது காதலி முழுவதும் உடனிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.


பூஹ்ஹின் காதலி அடிடயா சும்கியூ தன் காதலனுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மூன்றாம் ஆண்டு காதல் இன்றும் காதல் குறையாமல் இருக்கிறது என்று பகிர்ந்திருந்தார்.

அது பயங்கர வைரலாய் சமூக வலைதளங்களில் பரவியது. கண்களில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோய் சரி செய்ய முடியாது, அதிலும் உயிரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் ஆனாலும் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து என் புஹ் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அடிடயா.

மூன்று வருடங்களுக்கு முன்னர் புஹ்ஹை பார்த்த போது எப்படி காதல் வயப்பட்டேனோ அதே போலத்தான் இன்றும் அவன் மீது காதலுடன் இருக்கிறேன், அவனது உருவம் எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. அவனை நான் மனதார நேசிக்கிறேன் அவ்வளவு தான் என்கிறார்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் புஹ் கண்களில் ரெடினோப்ளாஸ்டோமா எனப்படுகிற ஒரு வகை புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன, இரண்டு முறை கீமோதெரபி 
ஆனாலும், கண்களைத் தாண்டி முகம் முழுவதும் புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியவில்லை.... புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியாது. கூடிய விரைவில் புஹ் மரணத்தை தழுவார் என்று உறுதியாக தெரிந்த பின்பு அவர் மேல் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன் என்கிறார் அடிடயா.

எங்களை எல்லாரும் வித்யாசமாக பார்க்கிறார்கள் அதான் அதற்காக நாங்கள் வருத்தப்பட வேண்டும் என்றோ கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை.

இது எங்களின் வாழ்க்கை, எங்கள் காதல் வாழ்க்கையை இன்னும் அழகாக்க எங்கள் நாட்களை இனிமையாக்க முடிந்தவரை முயல்கிறோம், பூஹ்ஹின் வாழ்நாள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது தெரியும், அவனது இறுதி மூச்சு இருக்கிற வரை அவனை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும்.

மருத்துவர்களே கைவிரித்து விட்ட நிலையில் தன்னுடைய குறைபாட்டினை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வலியை வெளிகாட்டாது, அன்புக் காதலி அடிடயா போட்டோ எடுக்கும் போது மகிழ்வாக போஸ் கொடுக்கிறார் பூஹ். இவர்கள் தங்கள் சமூக வலைதளத்தில் பகிரும் புகைப்படங்களுக்கு எல்லாரும் பாசிட்டிவ் கமெண்டஸ் கொடுத்து புஹ் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் இவர்களது காதல் ஜெயிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

Thursday, 15 March 2018

எவருக்கெல்லாம் மறுபிறவி ஏற்படுவதில்லை என சாஸ்திரங்கள் கூறுபவை...!

மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை  மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன.

பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து  விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி  ஏற்படுவதில்லை. 
 
இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும்  செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. 
 
தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி  ஏற்படுவதில்லை. தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை.
 
இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
 

நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம்.

கூட்டத்தில் ஓரமாக நின்று மகளின் விளையாட்டை ரசித்த விஜய்; வைரல் புகைப்படம்


நடிகா் விஜய் தனது மகள் ஷட்டில் காக் விளையாடுவதை ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் விஜய்யும் ஒருவர். பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து திரையில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது எ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

விஜய்க்கு  சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் உள்ளனர். தற்போது விஜய்யின் மகள் ஷட்டில் காக் விளையாடும் போது அதனை கூட்டத்தில் ஒருவராக விஜய்  ஓரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
தனது மகன் சஞ்சய்யை வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்து திரையில் அறிமுகம் செய்தார். அதேபோல் மகளை 'தெறி' படத்தில்  கடைசி காட்சியில் அறிமுகம் செய்து வைத்திருந்தார். இருந்தாலும் மீடியா பக்கம் அவ்வளவாக தலை காட்டுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



குட்நைட் சொல்லி தூங்க சென்ற டிவி சீரியல் நடிகை தூக்கில் தொங்கிய மர்மம் என்ன





சமீபகாலமாகவே இந்தியா முழுவதிலும் சினிமா நடிகைகள் மற்றும், டிவி சீரியல் நடிகைகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. திடீரென வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் குறைவது, அதிக வேலைப்பளுவால் மன அழுத்தம், காதல் தோல்வி, டார்ச்சர் போன்ற பல காரணங்கள் நடிகைகளின் தற்கொலைக்கு கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 23 வயது மெளமிதா என்ற நடிகை இன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொல்கத்தா போலீசார் அவரது அறையை சோதனை செய்ததில் ஒரு கடிதத்தை கண்டெடுத்தனர். மேலும் அவரது செல்போன், சமூகவலைத்தள பக்கங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

நடிகை மெளமிதா முந்தைய நாள் இரவில் மகிழ்ச்சியுடன் குட்நைட் சொல்லிவிட்டு தூங்க சென்றதாகவும், மறுநாள் காலையில் அவர் தூக்கில் தொங்கி இறந்ததை பார்த்து தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் மெளமிதா தங்கியிருந்த வீட்டின் ஓனர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்

பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்த வாய்ப்புகளும் கைகொடுக்காமல் போனதாலும் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இனிமே தியேட்டரே வேண்டாம்: அதிரடி முடிவு எடுக்கும் தயாரிப்பாளர் சங்கம்






மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் கியூப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்காக என்று கூறப்பட்டாலும் உண்மையில் பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் தான் என்று கூறப்படுகிறது.

ஒருபக்கம் மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பு தயாரிப்பாளர் பக்கமிருந்து வந்ததும், மார்ச் 16 முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக இன்று முதல் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட எந்த பணியும் கிடையாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதிக கட்டணம், அதிக பார்க்கிங் கட்டணம், கொள்ளை விலையின் தின்பண்டம் ஆகியவை காரணமாக தியேட்டரில் கூட்டம் குறைந்துவிட்டது. மேலும் ரூ.5 கோடி பட்ஜெட் படத்திற்கும் ரூ.200 டிக்கெட், ரூ.50 கோடி பட்ஜெட் படத்திற்கும் அதே டிக்கெட் என்ற முறையை மாற்றி சின்ன பட்ஜெட் படத்திற்கு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.

இந்த நிலையில் ஒருசில முன்னணி தயாரிப்பாளர்கள் இனிமேல் தியேட்டரே வேண்டாம் என்று வெப்சீரியலை நோக்கி செல்ல தொடங்கிவிட்டனர். இதற்கு முதல் பிள்ளையார் சுழியாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வெப் சீரியலை பாபிசிம்ஹா நடிப்பில் தயாரிக்கவுள்ளது. இந்த வெப்சீரியல் வெற்றி பெற்றால் இனி தியேட்டர் நிலைமை என்ன ஆகுமோ? தெரியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்

Friday, 9 March 2018

Sasikumar Upcoming Movies

Sasikumar Upcoming Movies



Asuravadham

Asuravadham is a Tamil action movie, directed by Maruthupandian. The cast of Asuravadham includes Sasikumar,Nanditha. 












     Nadodigal 2


   Nadodigal 2 is a Tamil action, drama movie directed              by     Samuthirakani. The movie feature Sasikumar in        male lead role, Athulya Ravi and Anjali in the female ...


இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘ வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றன...