யாருக்குத்தான் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்காது. எல்லோருக்குமே தங்களைத் தாங்களே கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொள்ள மிகப் பிடிக்கும்.
அதேசமயம் கொஞ்சம் கருப்பாக இருந்துவிட்டால் போதும். நான் மட்டும் ஏன் இவ்வளவு கருப்பாக இருக்கிறேன் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்த புலம்பல் அதிகமானால் அதுவே தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடுகிறது. இதெல்லாற்றையும் தூக்கிப் போடுங்கள்.
அதேபோல வெட்டியாக பார்லருக்கு செலவிடுவதை விட, வீட்டில் ஓய்வாக இருக்கும்போது சில குட்டி குட்டி விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும்.
கொளுத்தும் வெயில் கோடை காலம் வேறு தொடங்கிவிட்டது. இப்போது வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கவலை இன்னும் அதிகமாகியிருக்கும். கவலையே படாதீங்க… எவ்வளவு வெயில் அடிச்சா நமக்கென்ன… நம்ம சருமம் கருத்துப்போகாம எப்பவும் பப்பாளிப்பழம் மாதிரி பளபளன்னு இருக்க நம்மகிட்ட தான் நிறைய ஐடியா இருக்கே… அப்புறம் நம்ம ஏன் கவலைப்படணும்… கவலைப்படறத நிறுத்திட்டு கீழே சொல்றத செய்ங்க… தங்கம் மாதிரி மின்ன ஆரம்பிச்சுடுவீங்க
பளபள சருமத்துக்கு
தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒருஸ்பூன், ஈஸ்ட் பவுடர் அரை ஸ்பூன், இவை எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின் கழுவி விடவும். முகம் உடனே பளப்பளப்பாக மாறிவிடும். எங்காவது பார்ட்டிக்கு போகும் முன் இப்படி செய்து பாருங்கள். நீங்களே அசந்து போயிடுவீங்க.
பாலாடை
தயிர் ஏடு அல்லது பால் ஏடு சிறிதளவு எடுத்துக்கொண்டு கால் ஸ்பூன் மஞ்சள் தூளை அதனுடன் சேர்த்து நன்கு நைசாகக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அந்த கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, பின் 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருக்கவும். இதை தினமும் செய்து வந்தாலே எப்படிபட்ட கருமையும் நீங்கிவிடும்.
கரும்புள்ளி நீங்க
ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment