Saturday, 17 March 2018

உண்மைக்காதலாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்!

உண்மை காதலை நிரூபித்த காதல் தம்பதிகள்

ந்த காலத்து பசங்க கிட்ட உண்மையான காதலையே பார்க்கமுடியலப்பா என்ற வசனம் பெரும்பாலான இடங்களில் கேட்டிருப்போம். குறிப்பாக பெண்கள் இதில் அதிகமாக வசை வாங்குபவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் பணத்திற்கு தான் வருவார்கள், நம்மிடம் பணமில்லை என்று தெரிந்தால் போதும் உடனேயே நம்மை ப்ரேக் அப் செய்து விடுவார்கள் என்கிற பேச்சு எப்போதும் கடந்து வந்திருப்போம், ஆனால் இந்த கூற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு காதல் தம்பதிகள்!

தாய்லாந்தை சேர்ந்த இருபத்தியோரு வயதான பூஹ் சோக்சாய் என்ற நபருக்கு கண்களில் புற்றுநோய் அதுவும் லாஸ்ட் ஸ்டேஜ். கண்களில் ஏற்பட்ட புற்றுநோ மெல்ல பரவி முகம் முழுவதும் பரவியிருக்கிறது. உறவுகளே அருகில் வர தயங்கக்கூடிய இந்த சூழலில் இவரது காதலி முழுவதும் உடனிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.


பூஹ்ஹின் காதலி அடிடயா சும்கியூ தன் காதலனுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மூன்றாம் ஆண்டு காதல் இன்றும் காதல் குறையாமல் இருக்கிறது என்று பகிர்ந்திருந்தார்.

அது பயங்கர வைரலாய் சமூக வலைதளங்களில் பரவியது. கண்களில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோய் சரி செய்ய முடியாது, அதிலும் உயிரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் ஆனாலும் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து என் புஹ் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அடிடயா.

மூன்று வருடங்களுக்கு முன்னர் புஹ்ஹை பார்த்த போது எப்படி காதல் வயப்பட்டேனோ அதே போலத்தான் இன்றும் அவன் மீது காதலுடன் இருக்கிறேன், அவனது உருவம் எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. அவனை நான் மனதார நேசிக்கிறேன் அவ்வளவு தான் என்கிறார்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் புஹ் கண்களில் ரெடினோப்ளாஸ்டோமா எனப்படுகிற ஒரு வகை புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன, இரண்டு முறை கீமோதெரபி 
ஆனாலும், கண்களைத் தாண்டி முகம் முழுவதும் புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியவில்லை.... புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியாது. கூடிய விரைவில் புஹ் மரணத்தை தழுவார் என்று உறுதியாக தெரிந்த பின்பு அவர் மேல் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன் என்கிறார் அடிடயா.

எங்களை எல்லாரும் வித்யாசமாக பார்க்கிறார்கள் அதான் அதற்காக நாங்கள் வருத்தப்பட வேண்டும் என்றோ கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை.

இது எங்களின் வாழ்க்கை, எங்கள் காதல் வாழ்க்கையை இன்னும் அழகாக்க எங்கள் நாட்களை இனிமையாக்க முடிந்தவரை முயல்கிறோம், பூஹ்ஹின் வாழ்நாள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது தெரியும், அவனது இறுதி மூச்சு இருக்கிற வரை அவனை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும்.

மருத்துவர்களே கைவிரித்து விட்ட நிலையில் தன்னுடைய குறைபாட்டினை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வலியை வெளிகாட்டாது, அன்புக் காதலி அடிடயா போட்டோ எடுக்கும் போது மகிழ்வாக போஸ் கொடுக்கிறார் பூஹ். இவர்கள் தங்கள் சமூக வலைதளத்தில் பகிரும் புகைப்படங்களுக்கு எல்லாரும் பாசிட்டிவ் கமெண்டஸ் கொடுத்து புஹ் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் இவர்களது காதல் ஜெயிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘ வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றன...