ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி ஒரு தேக்கரண்டி அளவு கொடுப்பார்கள். அதனாலேயே பலருக்கும் அதன் மேல் வெறுப்பு உண்டு. ஆனால் ஊட்டச்சத்துள்ள இது டானிக் போன்று நமக்கு ஆரோக்கியமான விளைவுகளை கொடுக்கும். நம் முன்னோர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலமிளக்கியாகவும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சுலபமாக பிரசவிக்கவும் இதனை உபயோகப்படுத்தி உள்ளனர்.
அதிலுள்ள பயனுள்ள மூலக்கூறு அமைப்பை விஞ்ஞானிகள், இப்போதுதான் தெளிவுபடுத்தியுள்ளனர். இதில் 90 சதவீதம் உள்ள ரிஸினோலெயிக் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்து கருப்பை மற்றும் குடலில் ஒரு நல்ல ஊக்கியாக செயல்படுவதை கண்டறிந்துள்ளனர். தேவையில்லாத மருந்துகளை விட விளக்கெண்ணெய் மிக அற்புதமாக செயல்படுவதை விளக்கியுள்ளனர்.
2 ஸ்பூன்
தினமும் ஒரு தேக்கரண்டி நீர்த்த விளக்கெண்ணெய் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மாற்று மருந்து கடைகளில் விரும்பத்தகாத சுவையில் உள்ள இந்த திரவத்தை மலமிளக்கியாக விற்கின்றனர். உணவு மற்றும் சுகாதாரத்துறை அமைப்பான எப்.டி.ஏ விளக்கெண்ணெயை பாதுகாப்பானதாகவும் பக்க விளைவுகளற்றதாகவும் வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் நுட்பத்தை ஆராய்ச்சியாளர்களால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆராய்ச்சி
“நாம் பழைய கால பாட்டி வைத்தியம் போன்றவற்றை பற்றி படிக்கும் போது அவற்றிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறோம்” என்று ஜெர்மனியில் உள்ள மாக்ஸ் பிளாங்க் இதய நுரையீரல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த உயிரியலாளரான ஸ்டீபன் ஆஃபர்மன் சொல்கிறார். இங்கு மிகவும் ஆச்சரியமான ஒன்று என்னவென்றால் விளக்கெண்ணெய் வேலை செய்யும் விதம் ஆகும். ஆஃபர்மன் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள், செல்லுலார் ரிஸப்டார்களுடன் பிணையக்கூடிய பல்வேறு கொழுப்பு அமிலங்களை ஆராய்ந்து பார்த்த போது ரிஸினோலெயிக் அமிலத்தில் அவர்கள் எதிர் பார்த்த பலன்கள் கிடைத்தன.
பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவத்தில் விளக்கெண்ணெயின் உபயோகம் அதிகமாக இருந்துள்ளதை கண்டு, அவர்கள் அதன் மூலக்கூறை விரிவாக ஆராய முடிவு செய்தனர். செல்லுலார் ரிஸப்டார்களை தடுக்கக்கூடிய, மாலிகுலார் லைப்ரரியில் உள்ள பல்வேறு மூலக்கூறுகளை ஆராய்ந்த போது, ரிஸினோலெயிக் அமிலம் EP 3 மற்றும் EP 4 ரிஸப்டார்களுடன் இணைவதை கண்டுபிடித்தனர். இரண்டும், நியூரான்களின் அமைப்பை மாற்றுவது முதல் ரத்தத்தை உறைய வைப்பது வரை உடலில் பல்வேறு செயல்களை செய்யும் புரோஸ்டாகிலான்டின் ரிஸப்டார்கள்.
பயன்கள்
எலிகளில் சோதனை செய்த போது ரிஸினோலெயிக் அமிலம் EP3 உடன் வினையாற்றி மலமிளக்கி மற்றும் பிரசவ கால வலியை தூண்டுவது தெரிந்தது. ஒருவர் விளக்கெண்ணையை விழுங்கும் போது அதிலுள்ள ரிஸினோலெயிக் அமிலம் EP3 உடன் வினை புரிந்து சிறு குடலின் சுவற்றில் உள்ள மென்மையான தசை செல்களை சுருங்கச்செய்து மலமிளக்கியாக செயல்படுகிறது. இதேபோல ரிஸினோலெயிக் அமிலம் கருப்பையில் உள்ள EP3 உடன் வினைபுரிந்து அது சுருங்குவதற்கு காரணமாகிறது. இந்த அணி அதன் முடிவுகளை தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகளில் வெளியிட்டது.
“விளக்கெண்ணெய் செயலாற்றும் விதம் அதன் நச்சுத்தன்மை, தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைட் மீது ஆற்றும் வினைகள் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன என்று ஆஃபர்மன் குழு சொல்கிறது. ஆனால் இந்த ரிசெப்டர் தசைகள் சுருங்குவதற்க்கு எவ்வாறு காரணமாகிறது என்பது இன்னும் கண்டுபிக்கப்படவில்லை. குடல், கருப்பை மற்றும் EP 3 க்கு உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்ய இந்த தொடர்பு ஊக்குவிப்பதாய் உள்ளது.
மலமிளக்கி
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த பிலிப் பென்னட் “அவர்கள் இந்த ஆராய்ச்சியை நேர்த்தியாகவும், முழுமையாகவும் செய்துள்ளனர்” என்கிறார். ஒரு கட்டத்தில் இது ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருப்பது போல் தோன்றினாலும் அதை விட அதிகமான முடிச்சுகள் அவுக்கப்படாமல் உள்ளன. ரிஸினோலெயிக் அமிலம் EP3 உடன் பிணைக்கப்படுவது ரெசெப்டர்களை இலக்காக கொண்ட மருந்துகளை வடிவமைக்க உதவுகிறது என்று குறிப்பிடுகிறார். அத்தகைய மருந்துகள் மலமிளக்கியாகவும், பிரசவ கால வலி தூடியாகவும் போன்றவற்றுக்காக பயன்படும்.
வாந்தி மயக்கம் போன்ற பக்கவிளைவுகள் இல்லாத மருந்தாகவும் இருக்கும். நவீன மருத்துவம் இதனை இன்னும் முழுமையாக ஆதரிக்காவிட்டாலும், தினமும் விளக்கெண்ணெயை விலக்காமல் எடுத்துக்கொண்டால், மருத்துவ செலவு மிச்சமாகும். மேலும் இது தோல் நோய்கள், வலி, தொற்று நோய்களை சரி செய்கிறது. எனவே தினமும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையை துளி உப்பு அல்லது சர்க்கரையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.