Monday, 7 May 2018

இறந்தும் 8 பேருக்கு வாழ்வளித்த பெண்

திருப்பூர் : சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோமதி என்ற பெண்ணின் uடல் உறுப்புகளால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், செம்மி பாளையத்தைச் சேர்ந்தவர் கோமதி. கடந்த 4ம் தேதி வேலைக்கு சென்று திரும்பும்போது விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து அவரின் உடல் உறுப்புக்களான கல்லீரல், சிறுநீரகம், இதயம்,எலும்பு மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புக்கள் கோவை, சென்னை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பபட்டுள்ளது.இதன் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.


No comments:

Post a Comment

இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘ வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றன...