Wednesday, 18 April 2018

சிக்னல் கிடைக்கல; கால் போகல; 4ஜி சிம்மில் 2ஜி சேவை; தவிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள்!

கோவை: ஏர்டெல் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சரியாக சிக்னல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு கால் செய்தால், இணைப்பு கிடைக்க நீண்ட நேரம் ஆகிறது.


4ஜி சிம்மில் 2ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோவை தொலைத்தொடர்புத் துறை இணை இயக்குநர், ஏர்செல் முடங்கியதால், அதிலிருந்து 32 லட்சம் பேர் ஏர்டெல்லுக்கும், 27 லட்சம் பேர் வோடாபோனுக்கு, 8 லட்சம் பேர் பிஎஸ்என்எல்லுக்கும் மாறியுள்ளனர்.


இவ்வாறு குறுகிய கால அளவில், அதிக வாடிக்கையாளர்கள் மாறியதால் நெட்வொர்க் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்காலிக பிரச்சனை தான். 3 வாரங்களில் சரிசெய்யப்படும் என்றார்.




No comments:

Post a Comment

இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘ வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றன...